2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மருந்துகள் களஞ்சியப்படுத்த கொள்கலன்கள் கையளிப்பு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, கிண்ணியா வைத்தியசாலையில் டெங்கினால் பாதிக்கப்பட்டோருக்கான இடப்பற்றாக் குறை காரணமாக, மருந்து பொருட்கள் அறையை, நோயாளர் விடுதியாக மாற்றம் செய்யுமாறு, மருந்துப்பொருட்கள் வைப்பதற்கொன கொள்கலன்கள் இரண்டை வழங்குவதாக, மத்திய சுகாதாரப் பிரதியமைச்சர் பைஷல் காசீம், மார்ச் மாதம் 6ஆம் திகதி வாக்குறுதியளித்தார்.

வாக்குறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் இ​ரண்டு, முறையாக மருத்துவ களஞ்சியதுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு, கிண்ணியா வைத்தியசாலைக்கு இன்று (01) கையளிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கலந்துகொண்டு, வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எச்.சமீமிடம் இதனைக் கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X