Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
திருகோணமலை, வெருகல் பிரதேசத்தில் 234 ஆசிரியர்கள் தேவையான நிலையில், 140 ஆசிரியர்களே கடமையாற்றுவதாக அப்பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு, ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
கடந்த யுத்த காலத்தின்போது வெருகல் பிரதேசம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டதாகும். தற்போது அங்கு அபிவிருத்தி வேலைகள் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், இங்கு சமூக ரீதியான பாதிப்புகள் அதிகரித்துச் செல்லும் நிலைமையைக் காண முடிகின்றது.
பாடசாலைகளிலிருந்து இடைவிலகுதல், போதைப்பொருட்களின் பயன்பாடு, சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் என்பன அதிகரித்து வருகின்றன. சட்ட நடைமுறையூடாக இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை தாம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
28 minute ago
29 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
29 minute ago
2 hours ago