அப்துல்சலாம் யாசீம் / 2017 ஓகஸ்ட் 19 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரப்பன்கடவெல பகுதியிலுள்ள வயல் பகுதியில், 12 ஆமைகளைப் பிடித்து உணவுக்காக வெட்டிக்கொண்டிருந்த 9 பேரை, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், இன்று (19) கைது செய்துள்ளனர்.
அதே இடத்தைச் சேர்ந்த 09 இளைஞர்களே, இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள், 19, 20, 23 வயதுகளை உடையவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விடுமுறை தினத்தை, குதூகலமாகக் கொண்டாடுவதற்காக, வயல் பகுதியிலுள்ள நீர் தேங்கி நிற்கும் இடமொன்றில், 12 பால் ஆமைகளைப் பிடித்து, இரவு விருந்துபசாரத்துக்காக, குறித்த ஆமைகள் வெட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, சம்பவ இடத்தை சுற்றிவளைத்த அதிகாரிகள், 9 பேரையும் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 3 கத்திகள், சமையலுக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் போன்றவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .