Freelancer / 2022 ஜூன் 10 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் நாமல்வத்த பகுதியில், சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் தர்ஷினி அண்ணாதுரை முன்னிலையில், குறித்த சந்தேக நபரை முன்னிறுத்தியபோது இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இந்த நபர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
குடும்பத்தகராறு காரணமாக மது போதையில் மனைவியைத் தாக்கியமையால் மனைவி காயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் பக்கத்து வீட்டுச் பதினேழு வயதுடைய சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், சிறுமி சிகிச்சை பெற்று வருவதாகவும், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago