Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
வடமலை ராஜ்குமார் / 2018 செப்டெம்பர் 29 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு திருகோணமலை பிரதான தபாலகம் மற்றும் ஏனைய உபதபால் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பொது மக்கள் தொடர்பாடலும் நேர்முகாமைத்துவமும் என்ற தலைப்பிலான செயலமர்வு இன்று (29) இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு, பிரதம தபாலக தபாலதிபர் ந.குமணன் தலைமை தாங்கினார்.
அச்செயலமர்விற்கு, வளவாளராக கலந்துகொண்ட கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தர் வெ.இராஜசேகரம் கருத்து தெரிவிக்கிகையில்,
அரச சேவையை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றவேண்டும், இலங்கையிலே 2 கோடியே 70 இலட்சம் மக்கள் இருக்கின்றபோது அதில் 18 ஆயிரம் பேர் அரச சேவையாளர்களாக இருக்கின்றனர். சாதாரணமாக 18 பேருக்கு ஒருவர் அரச சேவையாளராக இருக்கின்ற போதும் பொது மக்களை திருப்திப்படுத்த முடியாதுள்ளது.
எனவே, நாம் பொது மக்களுடன் தொடர்பாடலை நேர்த்தியாக மேற் கொள்ளுதலும் எமது வேலை நேரத்தை முழுமையாக பயன்படுத்த நேர முகாமைத்துவத்தை கடைப்பிடிக்க வேண்டியவர்களாகவுள்ளது.
ஏதிர்வரும் காலம் கடிதப்பரிமாற்றம் குறைவடைந்து தகவல் தொழிநுட்ப அடிப்படையிலான செய்தி பரிமாற்றமே இடம்பெறவுள்ளது. அதற்கும் நாம் எம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டுமென வளவாளர் வெ.இராஜசேகரம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago