Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 05 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(திருகோணமலையிலிருந்து றிப்தி அலி)
கிழக்கு மாகாண சபை கூட்டங்கள் ஒழுங்கான முறையில் நடைபெறுவதில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாத், கிழக்கு மாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தில் குற்றஞ்சாட்டினார். இன்று திருகோணமலையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாண சபையின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "எமது சபையின் உறுப்பினர்கள் அங்கீகரிக்கப்பட்ட அடைக்களை ஒழுங்கான முறையில் அணிந்து வருவதில்லை. அத்துடன், சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அவர்கள் அமர்வதில்லை" என தெரிவித்தார்.
இதனால் சிறிது நேரம் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு பதிலளித்த சபைத் தவிசாளர் பாயிஸ், "கடந்த பல மாதங்காளாக இச்சபையின் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டு வருகின்றது. இச்சபைக் கூட்டத்தை ஒருவரும் தவறு கண்டதில்லை. இக்கருத்தினை மாகாண சபை உறுப்பினர் ஜவாத் வாபஸ் வாங்க வேண்டும்" என்றார்.
"அத்துடன், சபை கூட்டங்களில் கையடக்க தொலைபேசி பாவிக்க வேண்டாம் என்று பல தடவை வாய்மொழி மூலம் தெரிவித்துள்ளேன். அத்துடன் உறுப்பினர்களுக்கு எழுத்து மூலமும் அறிவித்துள்ளேன்.
இதனை யாரும் கடைப்பிடிப்பதாக இல்லை. எனது அறிவித்தல்களை கடைப்பிடிக்காதவர்களை சபையை விட்டு வெளியேற்றுவேன்" எனவும் தவிசாளர் பாயிஸ் கூறினார். எனினும், அவர் இவ்வாறு தெரிவித்த பின்னர் பலர் சபை கூட்டத்தின் போது கையடக்க தொலைபேசி பாவனையில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
38 minute ago
47 minute ago
52 minute ago