2025 ஜூலை 28, திங்கட்கிழமை

கிண்ணியா கல்வி வலய ஆசிரியர், மாணவர் கௌரவிப்பு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை, கிண்ணியா கல்வி வலயத்தில் இருந்து இவ்வருடம்  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 11 பாடசாலைகளைச் சேரந்த 40 மாணவர்களையும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை பாராட்டும் நிகழ்வும் இன்று நடைபெற்றது.

கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீது மண்டபத்தில் இந்நிகழ்வு காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பாராட்டுதல்களையும் கௌரவங்களையும் வழங்கி வைத்தார்.

கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.குத்தூஸ் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X