2025 ஜூலை 28, திங்கட்கிழமை

கிழக்குமாகாண உள்ளூராட்சி சபைகளிலுள்ள வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 15 , மு.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.ஆனுருத்தன் )
 
கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளில் நிலவும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்ப கிழக்குமாகாண உள்ளூராட்சி திணைக்களம் தீர்மானித்துள்ளது.
 
இதன் பிரகாரம் முதற்கட்டமாக திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபைகளிலுள்ள வெற்றிடங்கள் நேற்று வியாழக்கிழமை முதல் நிரப்பப்பட்டுள்ளன.
 
இம் மாவட்டத்திலுள்ள பிரதேசசபைகளில் கடமையாற்றுவதற்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை, கிழக்குமாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவரது அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.
 
கடந்த காலங்களில் குறித்த பிரதேசசபைகளில் நிலவிய தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள் காரணமாக உள்ளூராட்சிசபை நிர்வாகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதேசசபை தலைவர்கள், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X