2025 ஜூலை 28, திங்கட்கிழமை

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை விட அரசால் நியமிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் அதிகாரம்:விமலவீர திஸாந

Super User   / 2010 ஒக்டோபர் 17 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை விட அரசால் நியமிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

திருகோணமலை இன்ரர் நியூஸ் ஊடக இல்லத்தில் ஊடகவியலாளர்களுக்கு இலவச போக்குவரத்து பயண அட்டை வழங்கும் நிகழ்வில் கலந்த கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்துடன் "தங்களால் எந்தவொரு காரியங்களையும் சுயாதீனுமாக செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது" என அவ்ர் கூறினார்.

"கிழக்கு மாகாண ஆளுநர் அதிகாரங்களை தன் கையில் வைத்திருக்கின்றார். 40,000 க்கும் அதிகமான வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட நான் எதனையும் செய்ய முடியாத நிலையில் அதிகாரம் அற்றவனாக இருக்கின்றேன்" எனஅமைச்சர்விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X