Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலையில் சுற்றுலாத்துறை வளர்சியடைந்து வரும் நிலையில் சிறுவர் துஷ்பிரயோகங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இம்மாவட்டத்தில் தற்சமயம் சிறுவர் பாதகாப்பு உரிமை மீறல்கள் அதிகமாகியுள்ளன. இந் நிலையில் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் அவசியமானதாகும் என திருகோணமலை பட்டணமம் சூழலும் பிரதேச செயலாளர் திருமதி.ஜலதீபன் தெரிவித்தார்.
திருகோணமலை மாதுமையம்பாள் வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற மனித உரிமைகள் தின நிகழ்வில் கலந்துக்கொண்டு, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சிறுவர் உரிமைச் செயற்பாடுகளை நீங்கள் தொடர்ந்து முன்னெடுங்கள். அதனை யாரேனும் தடுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டால் உடன் எமது செயலகத்தை நாடுங்கள். நான் அதற்கான ஏற்பாடுகளையும், உதவிகளையும் செய்து தருவேன் என இதன்போது உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
20 minute ago
1 hours ago