2025 மே 03, சனிக்கிழமை

எச்சரிக்கையாக இருக்குமாறு ஈபிடிபி அங்கத்தவர்களுக்கு அறிவுறுத்தல்

Super User   / 2012 ஏப்ரல் 04 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் ஈபிடிபி அங்கத்தவர் ஒருவர் எல்.ரி.ரி.ஈயினர் என்று கூறப்படுபவர்களால் கொல்லப்பட்டதையடுத்து ஈபிடிபி அங்கத்தவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் அறிவுறுத்தியுள்ளதாக அக்கட்சி அங்கத்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் பிரச்சினைகளை ஏற்படுத்த எல்.ரி.ரி.ஈ.  அங்கத்தவர்கள் குழுவொன்று முயற்சிப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததையடுத்து பாதுகாப்புப் படையினர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளனர்.

ஈபிடிபி அங்கத்தவரான வேலாயுதம் ரகுநாதன் மார்ச் 18 ஆம் திகதி எல்.ரி.ரி.ஈ. அங்கத்தவர்கள் என்று கூறப்படுபவர்களால் கொல்லப்பட்டார். (அமதோரு அமரஜீவ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X