2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண மாடுகளின் உரிமையை உறுதிப்படுத்த காதில் அடையாளமிட தீர்மானம்

Super User   / 2012 ஏப்ரல் 11 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி)


கிழக்கு மாகாணத்தில் காணப்படும் மாடுகளுக்கு காதில் அடையாளமிட்டு மாட்டின் உரிமையை உறுதிப்படுத்துவற்கு கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே மாகாண அமைச்சரவையின் ஊடக பேச்சாளரான அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"மாடுகளுக்கு அடையாளமிடும் செயற்பாட்டினை கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ளது.

அடுத்த இரு மாதங்களில் சுமார் 350,00 மாடுகளுக்கு காதில் அடையாளமிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இத்தொழிலில் பரீட்சயமுள்ள 90 தொழிலாளர்கள் முதற் கட்டமாக ஒரு மாதத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் சேவையில் அனுமதிக்கப்படவுள்ளனர்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X