2025 மே 02, வெள்ளிக்கிழமை

அமைச்சர் பஸிலுக்கு சம்பந்தன் எம்.பி. கடிதம்

Super User   / 2012 ஏப்ரல் 18 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்து கடந்த ஐந்து வருடங்களாக நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களை உறுதியளித்த படி பாரம்பரிய வாழ்விடங்களில் விரைவாக மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்; பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிற்கு கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி அனுப்பிய கடிதத்திலேயே இக்கோரிக்கையினை விடுத்துள்ளார்.

"சம்பூரில் அனல் மின் நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணிகள் தவிர்ந்த ஏனைய காணிகளில் பாரிய கைத்தொழில் பேட்டை அமைப்பது தொடர்பாக ஆராய்வதற்காக கலந்துரையாடலொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை முதலீட்டு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலுக்கு தலைமை வகித்து பேசிய நீங்கள்,  அனல் மின் நிலையம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட காணிகளை தவிர ஏனைய காணிகளில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் அனைவரும் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும். அக்காணிகளை கைத்தொழில் பேட்டை அமைப்பதற்கு பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளீர்கள்" என குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இடம்பெயர்ந்துள்ள மக்கள் அனைவரும் அனல் மின்னிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட காணிகள் தவிர்ந்த ஏனைய காணிகளில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளார் எனஇலங்கை முதலீட்டு சபையின் தலைவரை சந்தித்து உரையடி போது தெரிவித்தார் எனவும் சம்பந்தன் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\

அமைச்சர் பஸில் ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில் இந்த நிலைப்பாட்டை எடுத்ததற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிலைப்பாட்டி படி இடம்பெயர்ந்துள்ள சம்பூர் மக்களை அவர்களின் சொந்தக் காணிகளில் மிக விரைவாக மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும் படியும் அதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் குறித்த கடித்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X