2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஆற்றில் குளித்த இளைஞன் தலையில் அடிப்பட்டு மரணம்

Kogilavani   / 2012 மே 01 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)
கிண்ணியா பூவரசந்தீவில் வடசல் ஆற்றில் குளித்த இளைஞர் ஒருவர் தலையில் அடிபட்ட நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சைப் பலனின்றி நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா பூவரசந்தீவைச் சேர்ந்த ஜெய்யூன் அன்சார் என்ற 19 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை நண்பர்களுடன் இவ்வாற்றில் குளிப்பதற்காக சென்று போது மரத்தில் ஏறி பாய்ந்து விளையாடிக் கொணடிருந்தாகவும் ஆற்;றில் நீர் மட்டம் குறைந்து காணப்பட்டதால் தலையில் அடிப்பட்ட நிலையில் இவர் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X