2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிண்ணியா வாகன விபத்தில் எட்டு வயது சிறுமி உட்பட மூவர் காயம்

Super User   / 2012 மே 15 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி, எம்.பரீட், கஜன்)


கிண்ணியா பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தினை அடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கிண்ணியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கிண்ணியா ரீ.பி.ஜாயா வித்தியாலயத்தில் 3ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தினையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் குறித்த லொறியை தீயிட்டு  கொளுத்தியுள்ளனர். எனினும், லொறி முழுமையாக எரிவதற்குள் விரைந்த பொலிஸார் தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

குறித்த மாணவி இன்று நண்பகல் 12 மணியளவில் பாடசாலை விட்டு வெளியேறிய போது, கிண்ணியா, பிரதான வீதி வழியாக வந்த சீமெந்து ஏற்றிய பார லொறியே மாணவி மீது மோதியுள்ளது.

இதேவேளை, திருகோணமலை  - மட்டக்களப்பு வீதியின் கிண்ணியா பாலத்திற்கு  அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று  ரக் வாகனத்துடன் இன்று செவ்வாய்க்கிழமை  மோதியுள்ளது.

இ;ந்த விபத்தினால் மோட்டார் சைக்கிளில் பணயம் செய்த இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் கிண்ணியா தள  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதுடன் இவர்களில் ஒருவரின் நிலை ஆபத்தாகவுள்ளது.

குறித்த வாகன விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X