2025 மே 02, வெள்ளிக்கிழமை

சுகாதார சேவை தொழிலாளர்களின் சேவைப் பெயர் சுகாதாரசேவை உதவியாளர்கள் என மாற்றம்

Super User   / 2012 மே 15 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                           (ரமன்)

கிழக்கு மாகாண அரசாங்க வைத்தியசாலைகளில் கடமைபுரியும் சுகாதார சேவை தொழிலாளர்களின் சேவைப் பெயர் 2011 ஜூன் 17ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதாரசேவை உதவியாளர்கள் என மாற்றப்படுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக சுகாதாரதுறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கிழக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சிற்கு அறிவித்துள்ளார்.

மிக நீண்ட காலமாக சுகாதாரசேவை தொழிலாளர்கள் என அழைக்கப்பட்டு வந்த இப் பணியாளர்கள் தமது சேவைப் பெயரை மாற்றுமாறு கோரிவந்தனர். இது தொடர்பில் சுகாதார துறை அமைச்சிற்கு தொழிற்சங்கங்கள் விடுத்த வேண்டுகோள்களை அடுத்தும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு விசேட பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து இதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றார்.

இத்தீர்மானத்தை உடனடியாக மாகாணம் முழுவதும் அமுல் படுத்துமாறு மாகாண சுகாதாரசேவை பணிப்பாளருக்கு கிழக்குமாகாண சுகாதாரதுறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர்  அறிவுறுத்தல் வழங்கியதுடன் மத்தியசுகாதார அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு தமது நன்றிகளையும் மாகாணத்தின் சார்பில் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X