2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிண்ணியா பொலிஸ் பிரிவின் கலாசாரம் மாற்றமாக உள்ளது: திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்

Super User   / 2012 மே 17 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)


கிண்ணியா பொலிஸ் பிரிவின் கலாசாரம் மாற்றமாக காணக்கூடியதாக உள்ளது என திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல விஜேவர்தன தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள 10 பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பாக உள்ளேன். எல்லா பொலிஸ் பிரிவிலும் முஸ்லிம்கள் இருக்கின்றனர். ஆனால், கிண்ணியா பொலிஸ் பிரிவின் கலாசாரம் மாற்றமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிண்ணியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவி ஒருவர் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தர்.

இந்த விபத்தை அடுத்து வாகன எரிப்பு, வைத்தியசாலை உடைப்பு  பாடசாலைக்குள் மக்கள் புகுந்து அதிபரை மிரட்டியமை ஆகிய சம்பவங்கள் இடம்பெற்றன.

இச்சம்பவங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று புதன்கிழமை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுது. இந்த சந்திப்பில் கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஊர் பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போதே, திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. இச்சம்வங்களில் ஈடுபட்டவர்களை மக்கள் பொலிஸாருக்கு அடையாளம் காட்ட வேண்டும.
இவ்வாறான சம்பவங்கள் உங்களுக்கு எதிர்காலத்தில் நடைபெறும் அதனால் இவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X