2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வயல்களுக்கூடாக வீதி அமைப்பதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு

Suganthini Ratnam   / 2012 மே 17 , பி.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

திருகோணமலை, தம்பலகாமத்தை சேர்ந்த நெற்செய்கையாளர்கள், தமது நெல்வயல்களுக்கூடாக நெடுஞ்சாலை அமைப்பதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நெடுஞ்சாலை அமைவதால் தாம் நெல்வயல்களை இழக்க நேரிடுமெனவும் தொடர்ந்து தமது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடுமெனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு மேலாக நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு வயல்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடுமெனவும்  மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓகஸ்ட் 30, 2011 இலிருந்து அவசரகாலச் சட்டம் காலாவதியாகிவிட்ட படியால் வர்த்தமானி அறித்தல் மூலம் உருவாக்கப்பட்ட உயர்பாதுகாப்பு வலயங்கள் இப்போது இல்லையெனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

புதிதாக அமையவுள்ள நெடுஞ்சாலைக்கு சமாந்தரமாக இரண்டு முக்கிய வீதிகள் ஏற்கெனவே இருப்பதால் இந்த நெடுஞ்சாலை தேவை இல்லாதவொன்றெனவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .