2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருமலை பொது வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு

Super User   / 2012 மே 18 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதர்)

திருகோணமலை பொது வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் திருகோணமலை, வரோதய நகர் பாரதி கிராமிய முதியோர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு வரோதய நகர் பாரதி கிராமிய முதியோர் சங்கம் அனுப்பி வைத்துள்ள முறைப்பாட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"இதனால் தூர இடங்களிலிருந்து வருகின்ற நோயாளர்கள் வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் வெளியில் உள்ள மருந்துக்கடைகளுக்கு சென்று மருந்துகளை வாங்கும்படி திருப்பி அனுப்பப்படுகின்றனர். வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள இக்காலத்தில் வெளிக்கடைகளில் மருந்துகளை வாங்க முடியாத நிலையில் கிராமத்து மக்கள் உள்ளனர்".

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X