2025 மே 02, வெள்ளிக்கிழமை

வினாடி வினா போட்டியில் திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரி வெற்றி

Kogilavani   / 2012 மே 24 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)

திருகோணமலையில் இடம்பெற்ற வினாடி வினா போட்டியில் திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளது. இதேவேளை, சிரேஷ்ட பிரிவில் நிலாவெளி மெதடிஸ்த தேவாலய குழுவினர் வெற்றிபெற்றனர்.

தேசிய இளைஞர் கிறிஸ்தவ சங்கத்தின் ஏற்பாட்டில் வருடம் தோறும் நடைபெற்று வரும் வேதாகம வினாடி வினா போட்டியின் இவ்வாண்டிற்கான போட்டி அண்மையில்  திருகோணமலை இளைஞர் கிறிஸ்தவ சங்கத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில், திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களைச் சேர்ந்த 38 குழுக்கள் பங்குபற்றின.

கனிஷ்ட பிரிவு, சிரேஷ்ட பிரிவு என இருபிரிவுகளாக நடாத்தப்பட்ட இப்போட்டிகளில் நான்கு பேரை கொண்ட குழுக்கள் போட்டியிட்டிருந்தன.
இப்போட்டியில் வெற்றி பெற்ற குழுவினர் கிழக்கு மாகாண போட்டியில் பங்குபற்ற உள்ளனர்.

மட்டக்களப்பில் அடுத்தமாத முற்பகுதியில் நடைபெறவுள்ள மாகாண மட்டபோட்டியில் வெற்றி பெறும் குழுக்கள் இறுதி தேசியமட்ட போட்டிக்காக கொழும்புக்கு செல்ல உள்ளனர்.

திருகோணமலை இளைஞர் கிறிஸ்தவ சங்கத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மெதடிஸ்த திருச்சபையின் திருகோணமலை சேகர முகாமைக் குருவானர் அருட்திரு சுஜிதர் சிவநாயகம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X