2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமிலுள்ள மக்களுக்கு புத்தாடை பொதி வழங்கும் நிகழ்வு

Super User   / 2012 மே 30 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து கிளிவெட்டி இடைத்தங்கல்  முகாமிலுள்ள மக்களுக்கு புத்தாடை பொதி வழங்கும் நிகழ்வு இன்று  புதன்கிழமை இடம்பெற்றது.

பிரிக்கேடியர் அதுல கொடிபிலியின் ஏற்பாட்டில் பிரிகேடியர் மிஹிந்து பாலசூரியவின் பங்களிப்புடன் கிளிவெட்டி முகாமில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பத்தரமுல்ல ரோட்டரிக் கழகத்தின் அனுசரணையுடன் சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக ரோட்ரக்ட் கழகத்தினால் இப்புத்தாடை பொதிகள் வழங்கப்பட்டன.

இடைத்தங்கல் முகாமிலிருக்கும் மக்களுக்கு கடந்ந டிசம்பருடன் உலக உணவு திட்டத்தினால் வழங்கப்பட்டு வந்த உலர் உணவு பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து குறித்த மக்கள் பெரும் கஷ்டத்திற்கு மத்தியில் வாழந்து வருகின்றனர். இந்நிலையிலே குறித்த புத்தாடை பொதிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .