2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

திருமலையில் மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிப்பதற்கான ஏற்பாடு

Kogilavani   / 2012 மே 31 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)
திருகோணமலையில் எதிர்வரும் ஜீலை மாதம் நடைபெறவுள்ள வர்த்தக கைத்தொழில் நிர்மாண  கண்காட்சியுடன் கூடிய கடற்கரை திருவிழாவின் போது மூத்த ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட உள்ளதாக கிறீன் கிளசிக் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஏ.யு.எல.ஏ.ஹில்மி தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினருடனான சந்திப்பு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சினேக் ஒழுங்கையில் உள்ள கண்காட்சி செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

திருகோணமலையில் நடைபெற உள்ள பிரமாண்டமான அழகிய  திருமலை Loving Trinco  கண்காட்சி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு பிரதானமானதாகும். 

30 வருட காலத்திற்கும் மேலாக யுத்த சூழ்நிலையில் வாழ்ந்த இம் மாவட்ட மக்கள் தற்போது படிப்டியாக  இயல்பு  வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்த இது நல்லதொரு சந்தர்ப்பம்.

இதேவேளை, ஊடகத்துறைக்கு  சேவையாற்றியவர்களை பாராட்டி  கௌரவிக்க  இருப்பதாகவும் அவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலாக்களை ஏற்படுத்திக் கொடுக்கத் தயாராக இருப்தாகவும் தலைவர் கலாநிதி ஹில்மி மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .