2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஆரியவதி கலப்பதி பிணையில் செல்ல அனுமதி

Super User   / 2012 ஜூன் 08 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் ஆரியவதி கலப்பதி 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 2 லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணையிலும் செல்வதற்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்தது.

நீதிமன்ற அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டின்பேரில் ஆரியவதி கலப்பதி கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று அவர் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம். இரு வாரங்களுக்கு ஒரு தடவை திருகோணமலை துறைமுக பொலிஸில் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

பிரதித் தவிசாளரினால் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் அதிகாரிகளுக்கு தீங்கிழைக்கப்பட்டால்  இப்பிணை அனுமதி இரத்துச்செய்யப்படும் எனவும் நீதவான் கூறினார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .