2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிழக்கு பல்கலையின் கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 16 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் திருகோணமலை வளாகத்தின்  முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு பல்கலைக்கழக  திருமலை வளாகத்தின் கல்விசாரா  ஊழியர்கள், வந்தாறுமூலை பல்கலைக்கழகம், கல்லடியிலுள்ள விபுலானந்த அழகியல் கற்கைகள்  நிறுவனம், மட்டக்களப்பு  சௌக்கிய பராமரிப்பு பீடம் ஆகியவற்றின் ஊழியர்கள்  ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

சம்பள முரண்பாட்டை நீக்குமாறும் விலைவாசிக்கு ஏற்ப சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வளாகத்திற்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக அனைத்துப் பல்கலைகழகங்களினதும் கல்வி சாரா ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X