2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஜபல் நகர் மலையில் பௌத்த விகாரையோ, புத்தர் சிலையோ நிர்மாணிக்க அரசு அனுமதி வழங்கவில்லை: அமைச்சர் ரெஜின

Super User   / 2012 ஜூன் 17 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


மூதூர் பிரதேசத்திலுள்ள ஜபல் நகர் மலையில் பௌத்த விகாரை அமைப்பதற்கோ அல்லது புத்தர் சிலை வைப்பதற்கோ அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என சிறுகைத்தொழில் ஏற்றுமதி ஊக்கவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரேதெரிவித்தார்.

முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும் ஜனாதிபதியின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளருமான நஜீப் ஏ. மஜீத்தின் அழைப்பின் பேரில் மூதூர் பிரதேசத்திற்கு அமைச்சர் ரெஜினோல்ட் குரே இன்று விஜயம் செய்தார்.

இதன்போது, நத்துவதுல் உலமா அரபுக் கல்லூரியில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

"குறித்த மலை பகுதியில் தொல்பொருள் தடயங்கள் இருந்தால் அதனை பாதுகாப்பதற்கு மாத்திரமே தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாறாக குறித்த மலை பகுதியில் புதிதாக பௌத்த விகாரை அமைப்பதற்கோ அல்லது புத்தர் சிலை வைப்பதற்கோ அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன் குறித்த பகுதி புனித பிரதேசமாகவும்  பிரகடனப்படுத்தப்படமாட்டாது.

எனவே, இப்பிரதேச வாழ் மக்களின் நிலங்கள் பாதிக்கப்படுமென்றோ, கல் உடைக்கும் தொழில் நிறுத்தப்படுமென்றோ அச்சங்கொள்ள தேவையில்லை" என்றார்.

இக்கலந்துரையாடலில் மூதூர் மஜ்லிஸ் ஷுறா தலைவர் மௌலவி எம்..எம். கரீம், முதூர் உலமா சபையின் தலைவர்  மௌலவி கே.எம். ஹரீஸ், மூதூர் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் கே.எம். காலிதீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் எம். நஸீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .