2025 மே 02, வெள்ளிக்கிழமை

அதிகஷ்ட பிரதேச ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கு நூலக வாசிப்பறை தொடர்பான செயலமர்வு

Super User   / 2012 ஜூன் 17 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)


கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள அதிகஷ்ட பிரதேச ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கு நூலக வாசிப்பறை தொடர்பாக இரண்டு நாள் செயலமர்வு கிண்ணியா விஷன் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமையும் இன்று ஞாயிற்றுக் கிழமையும் இடம்பெற்றது.

ரூம் டூ ரீட் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் கிண்ணியா விஷன் வாசிப்பறை இணைப்பாளர்  டீ.சவாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் திருமலை மாவட்ட ரூம் டூ ரீட் வாசிப்பறை திட்ட இணைப்பாளர் எஸ்.இராஜேந்திரன், கிண்ணயா கல்வி வலய பிரதி கல்வி பணிபாளர் ஏ.நசுவர்ஹான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கருத்தரங்கில் கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள 16 பாடசாலைகளின் சுமார் 75 ஆசிரியர்களும் 16 அதிபர்களும் பங்குபற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X