2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிக்க சதி: அமைச்சர் ரெஜினோல்ட்

Menaka Mookandi   / 2012 ஜூன் 17 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி)


விரைவில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என சிறு கைத்தொழில் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

'இதன் ஒரு அங்கமாகவே முஸ்லிம்கள் மத்தியில் அரசாங்கத்தைப் பற்றிய தவறான அபிப்பிராயங்களைத் தோற்றுவிக்கின்றனர். இதன் மூலம் அரசாங்கத்துக்குக்கு எதிராக முஸ்லிம்களை திசை திருப்பி முயற்சிக்கின்றனர்.

இதன் மூலம் அடுத்த மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு சில தீய சக்திகள் மேற்கொண்டு வருகின்றனர்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் ரெஜினோல்ட் குரே கிண்ணியா பிரதேச சபையில் இடம்பெற்ற ஊடகவியவியலாளர் மாநாட்டிலும் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்வாறு கூறினார்.

அத்துடன், 'மூதூர் - 64ஆம் கட்டை பிரதேசம் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்கு உரிய பகுதியாகும். குறித்த பகுதியில் எந்தவொரு மதத்தினரும் வழிபாட்டுத் தளங்களை அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதியளிக்காது' என அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது, திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவர் வழங்கிய பதில்கள்,

கேள்வி: முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தம்புள்ள, மாத்தறை, காலி, களுத்துறை என்று தொடர்கதையாகவே செல்கின்றன. இதற்கு அரசாங்கத்தால் உரிய தீர்வினைக் காண முடியாதா?

பதில்: இஸ்லாமியர்களுக்குள்ளும் சாதுலியா என்றும் தரிக்கா என்றும் தவ்ஹீத் என்றும் பல்வேறு பிரிவினர் உண்டு தானே. இதனை உங்களினால் தடுக்க முடியவில்லையே.

கேள்வி : இலங்கை பலஸ்தீன நட்புறவு சங்கத்தின் தலைவராக இருந்தவர் ஜனாதிபதியாகவுள்ளார். இஸ்ரேலுடனான உறவை அரசாங்கம் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் இங்கு முஸ்லிம்கள் தற்போது எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளுக்கு இஸ்ரேலின் சூழ்ச்சியே காரணமா?

பதில்: அரபுலகின் உயர்ந்த தலைவராகக் கொள்ளப்பட்ட சதாம் ஹுசைன் கொல்லப்பட்டார். கேணல் கடாபி கொல்லப்பட்டார். அமெரிக்கா இந்த அநியாயத்தை செய்த போது முஸ்லிம் உலகம் கைகட்டி பார்த்து கொண்டிருக்கவில்லையா? ஏன் அப்போது அவர்கள் உணர்ச்சிவசப்படவில்லை?

கேள்வி: இந்த நாட்டில் தற்போது பௌத்த மத தீவிரவாதபோக்கு மேலோங்குவதற்கு ஹெல உறுமயவே காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் அரசாங்கத்தால்  அவர்களைக் கட்டுப்படுத்த முடியாதா?

பதில்: இஸ்லாமியர்களுக்குள்ளும் தீவிரவாத போக்குடைய ஜிஹாத் அமைப்பு இருக்கிறதே. அவற்றை கட்டுப்படுத்த முடியவில்லையே.

கேள்வி: இரண்டு முஸ்லிம் கிராமங்களுக்கும் இரண்டு தமிழ் கிராமங்களுக்கு மத்தியில் மூதூர் 64ஆம் கட்டை பிரதேசத்தில் பௌத்த சிலை வைக்கப்பட்டு பௌத்த மத குரு ஒருவரும் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இது உண்மையா?

இதற்கு பதிலளித்த ஜனாதிபதியின் இணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான நஜீப் அப்துல் மஜீத், 'பௌத்த மத குரு நியமிக்கப்படவில்லை. அவருக்கு அங்கு எந்த வேலையுமில்லை. குறித்த இடத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் புத்தர் சிலை வைப்பதை அனுமதிக்கமாட்டேன்' என்றார்.

You May Also Like

  Comments - 0

  • aj Sunday, 17 June 2012 02:42 PM

    உள்நோக்கம் கொண்ட சுயநலம் கொண்ட கோஷ்டிகளின் கேள்விக்கு பதில்..... அடித்தது போல இருக்கு. மிக சரியான பதில் அமைச்சரே

    Reply : 0       0

    meenavan Sunday, 17 June 2012 04:41 PM

    அமைச்சர் குரே நீங்கள் பௌத்தரா? அல்லது கிறிஸ்தவரா? பௌத்த மேலாதிக்கத்தை ஊக்குவிப்பவர்களுள் நீங்களும் ஒருவர் தானே? இஸ்லாமியர்கள் மத தளங்களை அடித்து நொறுக்கமாட்டார்கள்,ஆனால் பௌத்த துறவிகள்...?

    Reply : 0       0

    fathima Sunday, 17 June 2012 05:04 PM

    அப்பட்டமான ஒரு பொய்யை கட்டவிழ்துவிடுகிறார் ரெஜினால்ட். அதை அமைதியாக அரை மயக்கத்துடன் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் இந்த முஸ்லிம் அர்சியல்வாதிகள்.

    Reply : 0       0

    Niyas Mohamed Sunday, 17 June 2012 08:57 PM

    ஆரம்பத்தில் தொல்பொருள் ஆராச்சிக்குரிய இடம் என்று கூறிய இடம்தானையா பொத்துவிலில் இப்போது மூது மகாவிஹாரை என்று பெயர் சூட்ட பட்டு பெரியதொரு புத்தர் சிலையும் வைக்கபட்டு வணக்க வழிபாடுகளும் நடக்கிறது! "கேட்பவன் கேனையன் என்றால் எறும்பு ஏரோபிளேன் ஓட்டுமாம்..."

    Reply : 0       0

    Hari Monday, 18 June 2012 01:06 AM

    மக்களின் பிரச்சினைகளுக்கான தேர்வா அல்லது நீதிமன்ற குறுக்கு விசாரணைக்கான பதிலா இவைகள்.

    Reply : 0       0

    ashfa Monday, 18 June 2012 03:35 AM

    அமைச்சரின் பதில்- கேள்விகளுக்கான பதிலாக இல்லயே... இதுவம்புக்கு பேசுவது போல உள்ளதே...

    Reply : 0       0

    pottuvilan Monday, 18 June 2012 06:09 AM

    வைக்க பட்ட புத்தர் சிலையை என்ன செய்யபோகிறீர்கள் நஜீப்? அரசாங்கத்துக்கு என்ன கைமாறு செய்வீர்கள்? அமைச்சரின் குறுக்கு கேள்விகள் உங்களுக்கு எப்படி இருந்தது?

    Reply : 0       0

    ASver Monday, 18 June 2012 07:57 AM

    It is a not proper answer

    Reply : 0       0

    mohamed Tuesday, 19 June 2012 05:42 PM

    இதைத்தான் எங்கள் ஊரில் சின்னபுள்ள தனமன பதில் என்று சொல்வார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X