2025 மே 02, வெள்ளிக்கிழமை

மூதூரில் மாபெரும் இரத்ததான நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூன் 18 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

மூதூர் அந்-நஹ்ழா இஸ்லாமிய சமூக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மூதூர் தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.

அந்-நஹ்ழா சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் மௌலவி எம்.எஸ்.எம்.சலீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூதூர் மஜ்லிஸ் அஸ்-ஷ{றா அமையத்தின் தலைவரும் முன்னாள் காழியாருமான எம்.எம்.கரீம், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். சுக்ரி,  மூதூர் தளவைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எச். சுபியான்,

திருகோணமலை சிறுவர் நன்நடத்தை நிலைய  பொறுப்பதிகாரி எம்.பி.எம். நளீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஆண்களும் பெண்களுமாக 133 பேர் இரத்ததானம் செய்தனர். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X