2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருமலை வைத்தியசாலையில் இருமொழி பிரயோகத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

Kogilavani   / 2012 ஜூன் 20 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)

'தேசிய மொழிகள் திட்டம்' திட்டத்தின் கீழ் இருமொழி பிரயோகத்தை மேற்கொள்தற்கான விசேட வேலைத்திட்டத்தில் திருகோணமலை வைத்தியசாலையை இணைத்து கொள்வதற்கான ஒப்பந்தம் நேற்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டது.

வைத்தியசாலையின் பதில் மருத்துவ அத்தியட்சகர் னுச.பேர்னாட் மற்றும் தேசிய மொழிகள் திட்ட வதிவிட முகாமையாளர் டொனால்ற் இ பிரௌனல் மற்றும் ஆசியா பவுன்டேஸன் நிறுவன உள்ளூர் பெருளாதார ஆளுகைத் திட்ட அணித் தலைவர் தினேசா டீ சில்வா ஆகியோருக்கிடையில் இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு, சீடா நிறுவனத்தின் நிதி அனுசரணையில் ஆசியா பவுன்டேஸன் நிலையத்தின் வழிகாட்டலுடனும்; கனடா நாட்டின் அக்றிடீம் என்ற விசேட மொழி கையாளுகை அமைப்பின் நிபுணத்துவ ஆலோசனையுடனும் நாடு முழுவதும் இந்த ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இவ் இருமொழி பிரயோகத்தை மேற்கொள்தற்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.

தேசிய மட்டத்தில் 12 அரச நிறுவனங்கள் இவ் இருமொழி பிரயோகத்தை மேற்கொள்வதற்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தெரிவு செய்யப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்டுள்ள 12 அரச நிறுவனங்களுள்; திருகோணமலை பொது வைத்தியசாலையும் ஒன்றாகும்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X