2025 மே 02, வெள்ளிக்கிழமை

போஷாக்கு மாத விழிப்புணர்வு பேரணி

Suganthini Ratnam   / 2012 ஜூன் 21 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


தேசிய போஷாக்கு மாதத்தினை முன்னிட்டு 'சேவ் ஒப் த சில்ரன்' அனுசரணையில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட போஷக்க்கு விழிப்புணர்வு பேரணி இன்று வியாழக்கிழமை மூதூரில் நடைபெற்றது.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.எம்.சுக்ரி தலைமையில் மூதூர் தபால் அலுவலக சந்தியிலிருந்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வரை இடம்பெற்ற இப்பேரணியில் திருகோணமலை மாவட்ட தாய் சேய் நல வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்.அஜீத், 'சேவ் ஒப் த சில்ரன்' திட்ட அதிகாரி ஆர்.ஜானகி, மூதூர் பிரதேச சபை தலைவர் ஏ.எம்.ஹரீஸ், உதவி பிரதேச செயலாளர் என்.பிரதீபன், உதவி திட்டமிடல் அதிகாரி ஆர்.பிரசாந் உதவிக் கல்விப் பணிப்பாளர் எச்.எம்.ஒஸ்மன், சம்பத் வங்கி முகாமையாளர்   முஸ்தகீம், மேற்பார்வை சுகாதாரப் பரீசோதகர் பி.கே.முனீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X