2025 மே 02, வெள்ளிக்கிழமை

மூதூரில் சிறுபோக நெற்செய்கை நீரின்றி பாதிப்பு

Kogilavani   / 2012 ஜூன் 28 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                               (முறாசில்)
மூதூர் பிரதேசத்திலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் சிறுபோக நெற்செய்கை நீர் இன்றி பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது.

மகாவலி கங்கையிலிருந்து கிடைக்கப்பெறும் நீரை நம்பியே இப்பரதேசத்தில் சிறுபோக நெற்செய்கை இடம்பெற்று வருகின்றது. இம்முறை வரட்சி காரணமாகவும் வேறு பகுதிகளுக்கு மகாவலி கங்கை நீர் திருப்பப்படுவதனாலும் நீர் மட்டம் குறைந்தனால் இப்பகுதி வயல் நிலங்களுக்கு நீரைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

அண்மையில் வெலிகந்தை கண்டல் காட்டுப்பகுதியில் மகாவலி கங்கையின் அல்லை வழியாகச் செல்லும் கிளையாற்றை குறுக்காக அணையிட்டு மறித்து, மாவில்லாறு வழியாக நீரை கொண்டுவருவதற்கு பாரிய முயற்சி எடுக்கப்பட்டபோதும் அம்முயற்சி பெரிதும் பலனளிக்கவில்லை.

இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த சில வருடங்களாக வெள்ளம் அல்லது வரட்சியினால் இப்பிரதேச விவசாயிகள்  மீண்டும் மீண்டும் பெரும் நஷ்டத்திற்குள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X