2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பில் திருமலையில் த.தே.கூ விசேட கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2012 ஜூலை 06 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

எதிர்வரும்கிழக்கு மாகாண சபைத்தேர்தல் பற்றிய முக்கிய கலந்துரையாடல் ஒன்று சனிக்கிழமை நாளை சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் அக்கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடத்தப்படவிருக்கின்றது.

மாகாணசபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் நிலவரம் பற்றி இதன்போது பரிசீலிக்கப்படும் என்று கட்சியின் திருகோணமலைக் கிளையின் தலைவர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவான உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆர்வலர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றுவர் என்றும் கட்சிவட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜாவும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X