2025 மே 02, வெள்ளிக்கிழமை

தென்னமரவாடி கிராமத்திற்கு நடமாடும் வைத்திய சேவை

Super User   / 2012 ஜூலை 08 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                               (சி.குருநாதன்)

திருகோணமலை நகருக்கு வடக்கே  73 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள தென்னமரவாடி கிராமத்திற்கு வாரத்தில் ஒரு நாள் நடமாடும் வைத்திய சேவையை நடத்துவதற்கு கிழக்கு மாகாண சுகாதாரத்திணைக்களம் முன்வந்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீளக்குடியமர்ந்துள்ள தமிழ் மக்கள் வாழுகின்ற தென்னமரவடிக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் விஜயம் செய்தார். அப்போது அங்கு மீளக்குடியமர்ந்துள்ள  464 உறுப்பினர்களைக் கொண்ட 88 குடும்பங்கள் தங்களின் தேவைகள் மற்றும் குறைபாடுகளை சம்பந்தனுக்கு தெரியப்படுத்தினர்.

கிராமத்தில் வைத்தியசாலை கிடையாது என்றும் பாடசாலை கிடையாது என்றும் அவர்கள் முறையிட்டனர். இதன்காரணமாக தாங்கள் வைத்திய வசதிகளை பெற முடியாத நிலை நிலவுவதாகவும் தங்களுடைய பிள்ளைகள் கல்வி வாய்ப்பில்லாது உள்ளனர் என்றும் அம்மக்கள் முறையிட்டனர்.

சம்பந்தன் அங்கிருந்து வண்ணம் தொலைபேசி மூலம் கிழக்கு மாகாண சுகாதாரப்பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு வைத்திய வசதி செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். சுகாதாரப்பணிப்பாளர் உடனடியாக வாரம் ஒருநாள் நடமாடும் வைத்திய சேவையை கிராமத்தில் நடத்துவதற்கு  ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் தரம் 1-தரம் 5 வகுப்புக்களை நடத்துவதற்கான ஆரம்ப பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க கல்விப்பகுதியினர் மூலம் நடவடிக்கை எடுப்பதாகவும் சம்பந்தன் மேற்படி மக்களுக்கு உறுதியளித்தார்.

1984 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்செயல்களின்போது முற்றாக இடம்பெயர்ந்த தென்னமரவடி கிராம மக்கள் தற்போது படிப்படியாக மீளக்குடியமர்ந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அடிப்படைவசதிகள் இல்லாது கஷ்டப்படுகின்றனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X