2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

திருமலைக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விஜயம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 09 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்,கஜன்)


திருகோணமலை மாவட்டத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை  விஜயம் மேற்கொண்ட  கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன், திருகோணமலையின் பட்டினமும்சூழலும் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள     வெள்ளைமணல் கருமலையூற்றுக் கிராமத்திற்கு  சென்று  அங்குள்ள மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்துகொண்டனர்.

மீனவர்களின் பிரச்சினை, காணிப்பிரச்சினை ஆகியவை தொடர்பில் இக்கிராம மக்கள்  அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இப்பிரச்சினைகளை அறிந்துகொண்ட அமைச்சர், இப்பிரச்சினைகள் தொடர்பில்   ஜனாதிபதி மற்றும்  பாதுகாப்புச் செயலாளரின் கவனத்திற்குகொண்டுவந்து இதற்கான தீர்வை பெற்றுத்தருவதற்கு முயற்சிப்பதாகக் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் முன்னாள்; அமைச்சர் அமீர் அலி, கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், கிண்ணியா நகரபிதா டாக்டர் எம்.ஹில்மி, மூதூர் பிரதேசசபை உறுப்பினர் ஜே.ஜஸ்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .