2025 மே 02, வெள்ளிக்கிழமை

பாரிய கைத்தொழில் விசேட வலயத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு

Super User   / 2012 ஜூலை 09 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                        (எஸ்.எஸ். செல்வநாயகம்)

தமக்கும் தம்மை போன்ற பலருக்கும் சொந்தமான தனியார் சொத்துக்களை அடக்கிய பிரதேசத்தில் 'பாரிய கைத்தொழில் விசேட வலயம்' என்பதைக் குறித்தொதுக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, திருகோணமலை மாவட்டத்தில் தமது குடியிருப்புகளிலிருந்து அகற்றப்பட்ட கிராமத்தவர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு தகுதியுடையதா என தீர்மானிப்பது பற்றிய விவாதம் ஜூலை 23 ஆம் திகதி நடைபெறும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஷிரானி ஏ பண்டாரநாயக்க, நீதியரசர் பி.ஏ.இரட்நாயக்க ஆகியோரைக்கொண்ட குழாம் இந்த அறிவிப்பை விடுத்தது.

இல1958/25 மே 17 ஆம் திகதிய விசேட வர்த்தமானிக்கு எதிராக மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டின் இலக்கம் 4 முதலீட்டு சபை சட்டத்தின் பிரிவு 22 ஏ இன்  ஏற்பாட்டின் கீழ் பாரிய கைத்தொழில்கள் விசேட வலயத்தை குறித்தொதுக்கும் வகையில் இந்த வர்த்தமானி மைக்கின்றது என மேற்படி மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த சொத்துக்கள் தமது குடும்பத்தினரால் பல்லாண்டுகளாக ஆளப்பட்டு வந்தவை என மனுதாரர்கள் கூறுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X