2025 மே 02, வெள்ளிக்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்காளி கட்சிகள் வேட்பாளர் ஆசன ஒதுக்கீடு குறித்து பேச்சு

Super User   / 2012 ஜூலை 10 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் தமிழரசு கட்சி, சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈ.பி,ஆர்.எல்.எப், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ, புளொட் மற்றும் ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஆசன ஒதுக்கீடு பற்றிய பேச்சுவார்த்தையை திருகோணமலையில் இன்று செவ்வாய்க்கிழமை நடத்தினர்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான இரா..சம்பந்தனின் திருகோணமலை வாசஸ்தலத்தில் திங்கட்கிழமை இரவு முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர்.

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று செவ்வாய்க்கிழமை காலையும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை செவ்வாய்கிழமை பிற்பகலிலும் சம்பந்தனின் இல்லத்தில் நடத்தப்பட்டன.

மாகாண சபைத் தேர்தலில் வேட்பாளர்கள் தெரிவில் கூட்டமைப்பில் உள்ள பங்காளி கட்சிகளுக்கு வழங்ப்படும் பிரதிநித்துவம் மற்றும் ஒதுக்கப்படும் ஆசனங்களின் எண்ணிக்கை பற்றியும்  இச்சந்திப்புக்களில் விவாதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

இச்சந்திப்புக்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி பகிரங்கப்படுத்தப்படவில்லை. எனினும் இச்சந்திப்புக்களில் ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் பங்குபற்றினர் என்று தெரியவருகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X