2025 மே 03, சனிக்கிழமை

சர்வதேச சமூகத்திடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியாத நிலைக்குள் இலங்கை அரசாங்கம் சிக்கியுள்ளது: சம்பந்

A.P.Mathan   / 2012 ஜூலை 11 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

இனியும் சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாது என்பது இலங்கை அரசாங்கத்திற்கு நன்றாகத் தெரியும். சர்வதேச சமூகத்திடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியாத நிலைக்குள் இலங்கை அரசாங்கம் சிக்கியுள்ளது. இந்த நிலையில் கிழக்கு மாகாண சபைத்தேர்தலை முன்கூட்டியே நடத்தி, கிழக்கு மக்கள் தம்மோடு தான் இருக்கின்றார்கள் என்று காட்டி சர்வதேச சமூகத்தை ஏமாற்றலாம் என்றும் அதன் மூலம் சர்வதேச அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்றும் மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கம் நினைக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை நண்பகல் அளவில் பன்குளம் பகுதியில் சாந்திபுரம் என்ற இடத்தில் நடத்தப்பட்ட கிழக்கு மாகாண சபைத்தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வில் பங்குபற்றி சம்பந்தன் உரையாற்றினார். சாந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ராஜாமணி தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

அங்கு சம்பந்தன் மேலும் சொன்னதாவது:-

ஐநா மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக்கூட்டம் ஒன்று எதிர்வரும் நவம்பரில் நடைபெறவிருக்கின்றது. வவுனியா சிறையிலிருந்து மஹர சிறைக்கு மாற்றப்பட்ட நிமலரூபன் கைதியின் மரணம் பற்றி அக்கூட்டத்தில் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படும்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் மற்றும் ஐநா நிபுணர் குழு அறிக்கை ஆகியன குறித்து கட்டாயமாக பதிலளிக்க வேண்டிய காலம் இலங்கை அரசாங்கத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது. அதிலிருந்து இலங்கை அரசாங்கம் தப்பிக்க முடியாத நிலை ஏற்படும். சரியான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காவிடில் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்.

இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் சிவ்சங்கர் மேனன் அண்மையில் கொமும்பு வந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ்வையும் அவரின் இரண்டு (கோட்டபாய மற்றும் பசில் ராஜபக்ஷ) சகோதரர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பரதூரமான விளக்கம் ஒன்று அவர்களுக்கு மேனன் அளித்தார். தரப்பட்ட உறுதிமொழிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிடில் எம்மீது குறை சொல்லாதீர்கள் என்ற கருத்துப்பட சிவ்சங்கர்மேனன் அவர்களிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் என்னுடனும் உரையாடினார்.

இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை என அரசாங்கம் கூறிவருகின்ற போதிலும் ராஜதந்திர நகர்வுகளில் இடம்பெறும் எல்லாவற்றையும் வெளியே கசிய விட முடியாது என்றும் சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • Mohammed Hiraz Wednesday, 11 July 2012 12:18 PM

    2,500 வருட காலம் எங்கள் நாடும் எங்கள் நாட்டு மக்களும் எவ்வள்வோ அந்நிய படையெடுப்புகளையும் ஆக்கிரமிப்புகளையும் எதிர்கொன்டு சமாளித்து தனித்துவதுடன் நிமிர்ந்தே நிட்கின்றனர் இது வரை இனி இதை விட என்ன பார தூரமான விளைவுகள் வந்தாலும் அதனையும் சமாளிப்பர் ஸ்ரீலங்கர்கள். ஆனால் அந்த பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நீங்கள் தயாரா?

    Reply : 0       0

    AJ Wednesday, 11 July 2012 12:36 PM

    ஐயா சம்பந்தன் மிகச் சிறந்த தலைவர் மற்றும் ராஜதந்திரி. இலங்கைக்கு எங்கு எங்கு பொறி வைக்க முடிமோ அங்கு எல்லாம் வைத்துகொண்டு இருக்கிறார்கள் தாயகத்தில் வாழும் தமிழர்களும் தமிழகத்தில் வாழும் தமிழர்களும்... புலத்தில் வாழும் தமிழர்களும். என்ன செய்தலும் இனி அரசாங்கத்தை உலகம் நம்புவது இல்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X