2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

எல்.ரி.ரி.ஈ. வீடியோ பார்த்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 13 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யுத்தக் காட்சியைக் கொண்ட 6 நிமிட வீடியோவை உள்ளடக்கிய மெமரி கார்ட்டொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,  முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் ஆண்கள் இருவரும் மூதூர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேக நபர்கள் இவ்வீடியோவை பார்த்துக்கொண்டிருந்தபோது மெமரி கார்ட் கைப்பற்றப்பட்டது. இச்சந்தேக நபர்கள் 50,000 ரூபா பணத்தையும் வைத்திருந்தனர்.

இவர்கள் மூதூர், பதனபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்தேக நபர்களிடம் மூதூர் பொலிஸாரின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர். (அமதோரு அமரஜீவா)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .