2025 மே 03, சனிக்கிழமை

இளைஞர் விருது வழங்கும் விழா

Suganthini Ratnam   / 2012 ஜூலை 15 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


இளைஞர் விருது வழங்கும் விழா 2012இற்கான திருகோணமலை மாவட்ட நிலைப்போட்டிகள் நேற்று சனிக்கிழமை திருகோணமலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயம் மற்றும் ஸ்ரீசண்முகா இந்துமகளிர்; கல்லூரிகளில் நடைபெற்றன.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறுபட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 20இற்கும் அதிகமான இளைஞர் கழகங்களின் அங்கத்தவர்கள் பங்குபற்றினர்.

நாட்டார் பாடல், மெல்லிசை, சாஸ்திரிய சங்கீதம் மற்றும் குழுநடனம், தனிநடனம், வாத்திய இசை, சித்திரம் வரைதல்  ஆகிய பிரிவுகளில்  போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் 400இற்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் இளைஞர் யுவதிகள் பங்குபற்றினர்.

இன்றைய போட்டிகளில் மாவட்ட மட்டத்தில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற தனிப்போட்டியாளர்களும் குழுக்களும் செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் விருது வழங்கும் போட்டியில் பங்குபெறத் தகுதி பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X