2025 மே 03, சனிக்கிழமை

கூட்டமைப்பு தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வேண்டும்: புளொட் தலைவர் சித்தார்த்தன்

Super User   / 2012 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனிப்பெரும் அரசியல் கட்சியாக உருவெடுக்க வேண்டும் என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

கிழக்கு வாழ் தமிழ் வாக்காளர்களின் கைககளில் தான் அது தங்கியிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை, சிவன்கோவில் வீதியிலுள்ள தந்தை செல்வா நினைவாலயத்திற்கு அருகாமையில் நகர சபை தலைவர் த. செல்வராசா தலைமையில் அண்மையில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடம் என்பதை எதிர்வரும் மாகாண சபை தேர்தல் முடிவுகள் மூலம் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தியேயாக வேண்டும்.

1987இல் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது அதன் கீழான அரசியல் தீர்வு தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாது என நாம் இந்திய அரசுக்கு எடுத்துச் சொன்னோம்.

ரஜீவ் காந்தி அதனை ஏற்றுக்கொண்டு இதனை ஆரம்பமாக ஏற்றுக் கொள்ளுங்கள். ஓராண்டு காலம் செல்ல நாம் அதனை பூரணப்படுத்துவோம் எனக் கூறினார்" ன்றார் அவர்.

இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சி.சிறிதரன், அ.விநாயகமூர்த்தி, ஆகியோரும் உரையாற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X