2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் வரக்கூடிய சாத்தியமுள்ளது: நஜீப் ஏ மஜீத்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)

கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிம் முதலமைச்சர் வரக்கூடிய சாத்திய கூறுகளும் காணப்படுகிறது என கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில்  திருகோணமலை மாவட்ட ஐ.ம.சு.கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் முன்னாள்  அமைச்சருமான நஜீப்- ஏ- மஜீத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடலொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
'இந்நாட்டில் ஒரு மனிதனுக்கு ஆட்சியையும், அதிகாரத்தையும் வழங்குவது எல்லாமே இறைவனின் செயல். அதனை ஏற்றுக் கொள்வதே முஸ்லிம்களின் தலையாய கடமையாகும்.

இந்த மாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தவரையில், இது எமக்கு முக்கியமான தேர்தலாகும்.  நான் கடந்த பொது தேர்தலிலே தோல்வியுற்று  எங்களால் செய்ய வேண்டிய பல வேலைகள் மக்களுக்கு செய்யமுடியாமல் போயுள்ளது.

ஆகவே, இந்த மாகாண சபை அமைப்பு வந்த பின்னர் இதன் மூலம் நிச்சயமாக மக்களுக்கு பல சேவைகளை செய்ய முடியும் என்ற நல்ல நோக்குடனேதான் இந்த தேர்தலில் நானும் போட்டியிடுகின்றேன். நாம் ஒன்றிணைந்து செயற்படுவதும் மூலமே இம்மாவட்டத்தில் ஆளும் பொது சன ஐக்கிய மக்கள் முன்னணி வெற்றி பெறுவதன் மூலமே இந்த நாட்டின் அபிவிருத்தில் பங்காளியாவோம்.

இம்மாகாணத்தில் ஒரு முஸ்லிம் முதலமைச்சர் வரக்கூடிய சாத்திய கூறுகளும் காணப்படுகின்றன. ஆகவே நாங்கள் இத் தேர்தில் வெற்றி பெறுவதுடன் மட்டுமன்றி பெரும்பான்மையான வாக்குளைப் பெற வேண்டும்.

அதேபோல ஆசிரியர்களைப் பொறுத்தளவில் கடந்த காலங்களிலே தரமான தகுதியான ஆசிரியர்களுக்கு பல பதவியுயர்வுகள் வழங்கப்படவில்லையென்பது எனக்கு மிகவும் கவலையளிக்கின்றது. எங்களது காலங்களில் 1994 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை நாங்கள் தகுதியானவர்களுக்கு உரிய முறையிலே பதவியுயர்வுகளை வழங்கி வந்தோம். எதிர்வரும் காலங்களிலும்  இம்மாகாண சபையின் மூலம் தகுதியானவர்களுக்கே முன்னுரிமை வழங்குவோம்' என்றார்.

  Comments - 0

  • thawfeek Saturday, 04 August 2012 03:42 PM

    1994 லில் இருந்து2010 ம் ஆனடு வரை தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்ததால்தான் இன்று கின்னியாவின் கல்வித்தரம் உயர்ந்திருக்கு. நன்றி உங்களை கல்வி அமைச்சராக்கனும் ஃபாருங்கோ நாட்டின் கல்வி தரத்தை உயர்த்திடுவீங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .