2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிண்ணியாவில் நிர்மாணிக்கப்பட்ட வரேவேற்பு கோபுர பணிகளை இடைநிறுத்த உத்தரவு

Super User   / 2012 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

கிண்ணியா, துறையடியிலுள்ள புதிய பாலத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படுகின்ற வரேவேற்பு கோபுர பணிகளை இடைநிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இடைநிறுத்த உத்தரவினை திருகோணமலை மாவட்ட செயலாளர் மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆகியோரல் கிண்ணியா நகர சபை மற்றும் கிண்ணியா பிரதேச செயலகம் ஆகியவற்றிற்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வரவேற்பு கோபுரம் நிர்மாணிப்பதற்கு கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.ஹில்மி மஹ்ரூபின் வேண்டுகோளிற்கிணங்க கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீனினால் 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் நகரத்தை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தை போன்று கிண்ணியா பிரதேசத்தையும் அழகுபடுத்தும் முகமாக இந்த வரவேற்பு கோபுரம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • srilankan Saturday, 04 August 2012 02:04 PM

    50 லட்சத்தில் நகரை அழகுப்படுத்தவதைவிட அங்குள்ள ஏழை மக்களின் தொழில் முன்னேற்றத்திற்கு ஏதாவது தொழில் வாய்ப்புக்களை அமைச்சர் ஏற்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கைத் தொழில் அமைச்சரின் வேலையும் அதுதான். நகரை அழகுப்படுத்தும் வேலை அவரது இல்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .