2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பிரிட்டன் எம்.பி.க்கள் குழு – கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 03 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஐயத்தினை மேற்கொண்டுள்ள பிரித்தானிய நாடாளுமன்ற குழுவினர், இன்று வெள்ளிக்கிழமை மாலை கிழக்கு மாகாண ஆளுநர் மொகான் விஐயவிக்கிரமவை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் இலங்கைக்கு பிரித்தானியா வழங்கி வரும் உதவிகளைக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி ஆளுநரால் விளக்கமளிக்கப்பட்டது.

பிரித்தானிய நாடாளுமன்ற குழுவில் பல கட்சிகளின் எம்.பி.க்கள் 9பேர் அங்கம் வகிக்கின்றனர். இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் பிரித்தானிய குழுவினர் பிரத்தியேகமாக இன்று மாலை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .