2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சுதந்திரக் கட்சியின் திருலை தேர்தல் தொகுதிக்கான செயற்குழுக் கூட்டம்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன், எம்.பரீட்)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான அங்கத்தவர் சந்திப்பும் செயற்குழுக் கூட்டமும் இன்று சனிக்கிழமை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மீன்பிடி மற்றும் நீரியல்துறை அமைச்சர் ராஐப்த்த சேனாரத்ன முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் பிரதி அமைச்சர்களான சுசந்த புஞ்சிநிலமே, எம்.கே.டீ.எஸ்.குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வெற்றியடையச் செய்யுமாறும் கேட்டுக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .