2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிழக்கு பல்கலை திருகோணமலை வளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 08 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன், ரமன்)


கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு  பல்கலைக்கழகத்தின் நிர்வாகம், திருகோணமலை வளாகத்திற்கு தனியாக பிரித்து  மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புவியியல் ரீதியாக  கிழக்கு  பல்கலைக்கத்தின் அலுவலகத்திற்கும்  திருகோணமலை வளாகத்திற்கும் பல இடையூறுகள் காணப்படுகின்றன. உரிய நேரத்தில்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது இல்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை பல்கலைகழக மாணவர்களால் திருகோணமலை நகரில் மேற்கொள்ளப்பட்டது.

திருகோணமலை வளாகத்தை சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் இன்று காலை திருமலை நகர சபைக்கு முன்பாக உள்ள பல்கலைக்கழக கற்கை நிலையத்தின் முன்கூடி அங்கிருந்து ஊர்வலமாக நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பேரூந்து நிலைய பகுதிக்கு சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தின் போது தமது கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்களால் பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .