2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

த.தே.கூ வேட்பாளருடன் அமெரிக்க தூதரக அதிகாரி சந்திப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன், கஜன்)

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல்துறை அதிகாரி வில்லியம் லின்சென்மெயர் நேற்று புதன்கிழமை திருமலைக்கு சென்று, கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சிங்காரவேல் தண்டாயுதபாணியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.

இச்சந்திப்பில் தற்போதைய தேர்தல் தொடர்பில் அவர் கேட்டறிந்து கொண்டதுடன் சுதந்திரமானதும், அமைதியுமான தேர்தல் ஒன்றிற்கு தமது நாடு எப்போதும் பூரண ஆதரவாகவே இருக்கும் என்றும், அமெரிக்காவின் தென்கிழக்காசிய விவகாரங்களுக்கான உதவி இராஐங்க செயலர் றொபட் பிளெக் இறுதியாக இலங்கை வந்த போது இலங்கை அரசாங்கத்திற்கு காத்திரமான செய்தி ஒன்றை கூறிவிட்டு சென்றதாகவும் அவர் மீண்டும் செப்டெம்பர் மாதம் இலங்கை வரும்போது இன்னும் ஆழமான விடயங்களை பேச உள்ளார் என்றும் கூறினார்.

இச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிடும் ந.குமணன், ச.அந்தோணிப்பிள்ளை ஆகியோரும் அமெரிக்க தூதுவராலயத்தின் மற்றுமொரு அதிகாரியான ந.ராஐகுமாரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .