2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

திருமலை பொலிஸ் பிரிவில் உயிர் பாதுகாப்பு பிரிவு ஆரம்பிக்க நடவடிக்கை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

திருகோணமலை பொலிஸ் பிரிவில் உயிர் பாதுகாப்பு பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக 31 பொலிஸாருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிரிவு பொலிஸ் அத்தியட்சகர்  பந்துல விஜயவர்தன தெரிவித்தார்.

மேற்படி, உயிர் பாதுகாப்பு பிரிவில் கடமைபுரிவதற்காக பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றம்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்திற்கு வெளி இடங்களில் இருந்து வரும் பெருமளவிலான சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்துக்கள் ஏதும் நிகழாதவாறு பாதுகாப்பதற்காக இந்த பிரிவினை ஏற்படுத்தி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பயிற்சி பெற்றவர்களில் மூன்று பெண் பொலிஸாரும் உள்ளடங்குகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .