2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சர் றிசாட் ரொட்டவெவ பகுதிக்கு விஐயம்

Super User   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாட் பதியுதின் ரொட்டவெவ  பகுதிக்கு நேற்று செவ்வாய்கிழமை விஐயமொன்றினை மேற்கொண்டார்.

மொறவெவ  பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எஸ்.பைசர் விடுத்த வேண்டுகோளை அடுத்தே இந்த விஐயத்தின் அமைச்சர் மேற்கொண்டார்.

இதன்போது, ரொட்டவெவ  கிராமத்தை சுற்றி வனவள அதிகாரிகளினால் அமைக்கப்பட்டுள்ள எல்லைக் கட்டைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச சபை உறுப்பினரினால் வேண்டப்பட்டது.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து கட்டைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன் விளையாட்டு மைதானத்தை அமைக்க நீதி ஒதுக்கீடு செய்வதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.

இந்த விஜயத்தில் கிழக்கு மாகாண சபை வேட்பாளர்களான டாக்டர் ஹில்மி மஹ்ருப் மற்றும் அப்துல் றஸ்ஸாக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X