2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் அன்புநெறி பற்றிய போதனை

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர், யுவதிகளுக்கு அன்புநெறி பற்றி போதிக்கும் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. 

விவாத கருத்தொருமைமிக்க  வேலைத்திட்டத்தின் கீழ்  ஆன்மீக சுவை என்னும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை திருகோணமலை பிரதான வீதியில் உள்ள ஜெயசுமணராமய விகரையில் நடைபெற்றது.

தேசிய  இளைஞர் சேவைகள் மன்ற உதவிப்  பணிப்பாளர் கித்சிறியின் வழிகாட்டலில் மாவட்ட இளைஞர் சேவை  அலுவலகர் எஸ்.ரவிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குச்சவெளி, கிண்ணியா,  தம்பலகாமம்,  ஹோமரன்கடவெல, பட்டணமும்சூழலும் ஆகிய  பிரதேச  செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 150 இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.

பௌத்தம்,  இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ  மதத் தலைவர்கள்  அன்புநெறி  பற்றியும் அதன் மகத்துவம் பற்றியும் இளைஞர், யுவதிகளுக்கு விளக்கமளித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .