2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முஸ்லிம்கள் ஒரு போதும் நாட்டைக் காட்டிக்கொடுக்கவில்லை: அதாவுல்லா

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

'பெரும்பான்மையாக உள்ள சிங்கள மக்களோடு முஸ்லிம்கள்  மிகப்பழங்காலம் தொட்டு ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களது நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து,  மன்னர்காலம்    தொட்டு அரசியலிலும் பங்கெடுத்து வருகின்றனர். முஸ்லிம்கள் ஒரு போதும் நாட்டைக் காட்டிக்கொடுக்கவில்லை' என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்;சி, மாகாணசபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மூதூர்  நொக்ஸ் வீதிச்  சந்தியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

'முஸ்லிம் மக்கள் கிழக்கு மாகாணத்தில் செறிவாக இருந்தபோதும் கிழக்குக்கு வெளியிலேயே பெருந்தொகையானோர் வாழ்கின்றனர். அவர்கள் ஏனைய இனத்தவர்களோடு ஒற்றுமையாகவே வாழ்கின்றனர். இந்நிலைமையை எவரும் குலைத்துவிடக்கூடாது.

இக்கிழக்கு மாகாணத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகும். இத்தேர்தலில் நமது இருப்பை பாதுகாக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்தோடு இணைப்பதற்கான பாரிய சூ10ழ்ச்சியொன்று இடம்பெற்று வருகின்றது. இச்சூழ்ச்சியை சம்பந்தன் அவர்களது பேச்சு மற்றும் அறிக்கைகளிலிருந்து அறியக்கூடியதாக இருக்கின்றது.

இந்நிலையில் கிழக்கு மாகாணம் பிரிந்துதான் இருக்கவேண்டும் என்று விரும்புகின்ற, இம்மாகாணத்தில் நிம்மதியாக இருக்கும் வகையில் உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுத்தந்த  ஜனாதிபதி அவர்களின் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும்.

ஜெனிவா பிரேரணைக்கு எதிராக ஆதரவளித்த முஸ்லிம்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி அவர்கள் முஸ்லிம்களின் பள்ளிகளை உடைப்பதற்கு ஒரு போதும் துணைநிற்கமாட்டார். இதனை அவர் உறுதியாகக் கூறியுள்ளார்' என்றார்.

  Comments - 0

  • rima Friday, 31 August 2012 03:49 PM

    ஜெனிவா பிரேரணை....????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .